
1.குர்பானி என்றால் என்ன ?
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் கொடுத்து பலியிடுமாறு கட்டளையிட்டான்.
“நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் புனித ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் அள்ஹா) தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எனவேதான்....
“இஸ்லாமிய மாதம் துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகு இறவைனின் நெருக்கத்தை பெறுவதற்காக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலிருந்து “அறுத்துப்பலியிடுதலே” குர்பானி ஆகும்.
2. குர்பானியின் சிறப்பு என்ன ?
அல்லாஹ் தனது திருமறையி[குர்ஆனி] ல் குர்பானி [அறுத்துப்பலியிடுதல்] கொடுப்பதை இறைவன் சிறந்த நற்செயலாக திருமறையில் சிறப்பித்துள்ளான்.
“ஆகவே, உமது இறைவனைத் தொழுது, அறுத்துப்பலியிடவும் செய்வீராக!”
(அல் குர்ஆன் 108:2)
“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அல் குர்ஆன் 22:37)
இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ்வுக்காகவே அறுத்துப்பலியிடுவது அவனுக்கு விருப்பமான முக்கியசெயலாகும்.
மேலே கூரியவசனத்தில் அல்லாஹ்வின் திருபொருத்தத்தை நாடி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்து (பலியிடுதலே) குர்பானியின் சிறப்பாகும்...
3. கட்டாயம் அனைவரும் குர்பானி தரவேன்ட்டுமா?
கட்டாயம் அனைவரும் குர்பானி கொடுக்க வேண்டும் என்று ஷரியத்[சட்டம்] சொல்லவில்லை. வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
ஆதாரம் :- “அபூஹுரைரா [ரலியல்லாஹு...] அறிவிக்கிறார்கள்...
யார் தகுதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய தொளுகுமிடத்தை நெருங்க வேண்டாம் என்று நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்...
[நூல்:- அஹமது, இப்னு மஜா.]
“இன்னும் ஷேஹுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள். அறுத்துபலிடுதல் என்பது இஸ்லாத்தில் உள்ள காரியங்களில் சிறந்ததும், முக்கியமானதாகவும் உள்ளது. என்று
“நபி இப்ராஹீம் [அலைஹி] அவர்களின் சமூகத்தாருக்கு கடமையாக்கப்பட்டது.
நபி இப்ராஹீம் [அலைஹி] அவர்களுக்கு கடமையாக்கப்பட்டதை நாமும் பின்பற்ற வேண்டுமென்று இறைவனால் ஏவபட்டுள்ளோம் என்று கூறுகிறார்கள்.
4. குர்பான் கொடுப்பவகள் மீது என்ன என்ன காரியங்கள் செய்வது தடுக்கப்பட்டுள்ளது?
முடி, நகம் வெட்டுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்;- “நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் முதல் பிறையைகண்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை,
முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:- உம்முஸலமா(ரலி)
[நூல்;-முஸ்லிம்,நஸயீ,அபூதாவூத்,இப்னுமாஜா ,பைஹகீ.]
5. குர்பானி கொடுப்பவர் தெரிந்தோ தெரியாமலோ முடியையும்
நகத்தையும் வெட்டிவிட்டால் என்ன செய்வது?
இறைவனிடத்தில் பவ மன்னிப்பு கோரவேண்டும். இதற்காக மார்கத்தில் எந்த தண்டனைப்பரிகாரம் இல்லை.
6.குர்பானி பிராணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்?
குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும்.
“நடக்கக்கூடிய, அமரக்கூடிய, பார்க்கக்கூடிய, உறுப்புகள் குறைகளில்லாமல், கருமை நிறமுடைய ஓர் ஆட்டை குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வருமாறு நபி [ஸல்] அவர்கள் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்:- ஆயிஷா[ரலி]
(நூல்;- முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்,)
7. குர்பானி கொடுக்கும் பிராணிகள் எவ்வித குறைகளில்லிருந்து நீங்கிருக்கவேண்டும்?
* தெளிவாக தெரியும் நொண்டி,
* தெளிவாக தெரியும் கண்பார்வைக்குறைவு,
* தெளிவாகா தெரியும் நோய்,
* எலும்பில் சதைபற்று இல்லாத மெலிவு.
* கொம்பு உடையாமலிருத்தல்.
ஆகிய குறைப்பாடுகளுடைய பிராணிகளை குர்பானி கொடுக்கக்கூடாது.
என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்...
“மேலும் குர்பானி பிராணிகளின் கண்களையும், காதுகளையும் கவனித்து தேர்வு செய்யுமாறு நபி [ஸல்] அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
“மேலும் சிறிதளவு காது வெட்டப்பட்டவை,காது கிழிக்கப்பட்டவை,காதில் துவாரம் இடப்பட்டவை ஆகியவற்றை குர்பானி கொடுக்க கூடாது என்றும் நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டுள்ளார்.
அறிவிப்பவர்;- அலி[ரலி]
(ஆதார நூல்;- திர்மிதீ, அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற ) கால்நடை பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானி(பலி)யை நாம் ஏற்படுத்தினோம்.
(அல் குர்ஆன் 22:34)
8. குர்பானியின் பிராணி கொலு கொலுத்திருக்க [ சதை நிறம்ப ] இருக்க வேண்டுமா? நாமே வளர்க்கலாமா?
ரசூல் [ஸல்] அவர்கள் கொளுத்த இரண்டு கொம்புள்ள இரண்டு ஆட்டை கொண்டுவந்து குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் ஜாபிர் [ரலி]
மதீனாவில் குர்பானி பிராணிகளை நங்கள் கொழுக்க வைப்போம்.
[ஏனைய] முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.
“நூல்;-[புகாரி,தஃலீக்.]
9. குர்பானிய பிராணிகளுக்கு வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
“குர்பானிக்காக தேர்வு செய்யப்பட பிராணிகள் குறுப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபி [ஸல்] அவர்கள் நிர்ணயம்
நீங்கள் “முஸின்னா” (இரண்டு வயதுடையதை) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அருக்காதீர்கள்.
உங்களுக்குச் சிரமமாக இருந்தாலே தவிர,
அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ளதை) அறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலியல்லாஹு)
இதில் முஸின்னா என்று கூறப்படும் வார்த்தை
* ஆடாகவும், மாடாகவும் இருந்தால் இரண்டு வருடம் பூர்த்தியாகிருக்க வேண்டும்.
* ஒட்டகம் ஐந்து வருடம் பூர்த்தியாக வேண்டும் என்று கூறபடுகின்றது.
நூல்;- (முஸ்லிம் 3631. அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹமத், புஹாரி )
10. குர்பானி கொடுக்கும் நேரம் என்ன?
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் குர்பானி கொடுக்க வேண்டும்.
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு முன் குர்பானி கொடுக்கக்கூடாது.
“உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக”
(அல் குர்ஆன் 108:02)
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுபெருநாள் தினத்தில் தொழுகைக்கு பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர்தான் கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிராரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவராகமாட்டார், என குறிப்பிட்டார்கள்.
( அறிவிப்பவர்;- பர்ரா (ரலி) ( நூல்;- புஹாரி 955,5556)
“யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பானி கொடுக்கட்டும்.
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் தொழுகைக்கு முன் குர்பானி கொடுக்கிறாரோ, அது அவரின் குடும்பத்திற்காக அறுத்ததாக கணக்க்கிட்டுக்கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்;-(புஹாரி,முஸ்லிம்)
“துல்ஹஜ் பிறை 10 பெருநாள் தொழுகை அன்றும், அதனை தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் (பிறை 11,12,13 அன்று அஸர் நேரம் வரைக்கும்) குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட நாட்களாகும்.
(நூல்;- அஹமது, இப்னுஹிப்பான்)

மிருகங்களை கொலைசெய்வதுகுர்பானி அல்ல..,அது அல்லாவிற்க்கு தேவையுமில்லை என்பது தெளிவு... பகிற்ந்து உண்பதற்க்காகவே தாணம் செய்யவே இது நினைவுநாளாக உள்ளது. உணவைக்கொடுத்து பசிநீக்குங்கள், செல்வத்தால் அறியாமையை நீக்குங்கள்...இப்றாகீம்நபி(அலை)யின் நோக்கம் விலங்குபலிஅல்ல... அல்லா மகத்துவம் செய்த அந்தப்புனிதத்திருநாளை நபி(ஸல்)கொடைத்திருநாளாக கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாயிருக்கும்..,அந்தப் பணத்தில் ஒருவரை சிறுதொழில் செய்து பிழைக்கவைத்தும். தொழில்க்கல்வி கற்க்கச்செய்தும்.,.மாமிசத்துக்கு பதிலாக இப்படிக் கொடை செய்து தியாகத்திருநாளை கொடைத்திருநாளாகக் கொண்டாடுவோம். அல்லாவே அனைத்துமறிந்தவன்.
ReplyDelete