Friday, December 12, 2014

துபாயில் பேங்க் ஒன்றில் திர்ஹம்ஸ் 3லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை(ரூ.54 லட்சம்)பெற்று மற்றோரு பேங்க் ஒன்றில் டெபாசிட் செய்வதற்கு தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது கார் டயர் பழுதானது. 

இதனையடுத்து மாற்று டயர் பொருத்தும் பணியில் அவர் ஈடுபட்ட போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரிடமிருந்த திர்ஹம்ஸ் 3 லட்சத்து 20ஆயிரத்தை பறித்து கொண்டு ஓடினார்.

இதனை அவ்வழியாக காரில் சென்ற ஷான்நவாஸ்கான் ஜெயினுலாப்தீன் என்ற இந்தியர் இந்நிகழ்வினை கண்டுள்ளார். உடனடியாக விரட்டிச்சென்று திருடனை மடக்கி பிடித்துள்ளார். 

மேலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொல்லி சம்பந்தபட்ட நபரை காவல்துறையில் ஒப்படைத்தார். போலீசார் சம்பந்தட்ட நபரை கைது செய்தனர். இந்த தீர செயலை புரிந்த இந்தியரை துபாய் காவல் துறையினர் பாராட்டி கெளரவிக்கப்படுத்தினர்.

0 comments:

Post a Comment