
வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும். இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது.
வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளை செய்வதில் நேரத்தை செலவிடாமல், பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
குழந்தைகள் பள்ளிக்கும், டியூஷனுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தைகளை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
வேலைக்கு போகும் பெற்றோர் பெண் குழந்தைகளை பார்த்துக்கொள்ள நியமிக்கும் ஆட்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவராக இருக்கும்படி பார்த்து கொள்ளவும். மேலும் பெண் குழந்தைகளுக்கு துணையாக இருப்பவர் பெண்ணாக இருந்தால் நல்லது. பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும்.
அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா விஷயங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
0 comments:
Post a Comment