Friday, December 12, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்  07-12-2014 அன்று காலையில், பெரம்பலூர் கிளை  தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட தலைவர் ஷேக்ராஷித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்வமர்வில் பெரம்பலூர், புதுஆத்தூர், வி.களத்தூர், லெப்பைக்குடிக்காடு, அரியலூர், அம்பளவர்கட்டளை, ஜெயங்கொண்டம் மற்றும் புதுச்சாவடி ஆகிய கிளைகளிலிருந்து கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட பொருளாள‌ர் இப்ராஹிம் அவர்களால் நவம்பர் மாத வரவு & செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு, அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் கடந்த மாத செயல்பாடுகள் மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி அவர்கள் வாசிக்கப்பட்டது. 
 
தொடர்ந்து ஒவ்வொரு கிளை நிர்வாகிகளும் தனித்தனியே நவம்பர் மாதத்தின் வரவு & செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகளை வாசித்து காட்டினர்.
பிறகு டிசம்பர் மாதத்தில் என்னென்ன செயல்பாடுகளை செய்யவேண்டும் என்பதை குறித்த  சுற்ற‌றிக்கை அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டது; சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி அடுத்த மாத செயற்குழுவில் அனைத்து கிளைகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.



கடந்த அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடை பெற்ற “தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரம்” அல்லாஹ்வின் கிருபையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மெகாபோன்பிரச்சாரம, சுவர் விளம்பரங்கள், பேணர்கள், நோட்டீஸ்கள், அமைதிப்பேரணி மற்றும் மனித சங்கிலி ஆகியவற்றின் மூலம்; “இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை முஸ்லிம்களாகிய நாங்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை” என்று பொது மக்களுக்கு கொண்டு சென்று கள‌ப்பணியாற்றிய அனைத்து கிளை, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாவட்டதின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக இமாம். அப்துல்ஹமீத் மஹ்ழரி அவர்கள் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்கள்.
மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் சிறப்பாக நடைபெற ஏக இறைவனிடம் துஆ செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும், பொருளாதாரம் தந்து உதவிய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மாவட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு: மாவட்டதின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாம் ஏற்றுக்கொண்ட இந்த தூய மார்கத்தை முஸ்லிம்கள் மற்றும் பிறமதத்த‌வர்களுக்கும் நம்மால் இயன்றளவு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்பும், எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இறைஞ்சுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்...

0 comments:

Post a Comment