Monday, July 7, 2014

ரமழான் மாதம் என்றாலே ஒரு கண்ணியமிக்க மாதம் என்பது எல்லோருமே நன்கு அறிந்த ஒரு விடயம், அந்த மாதத்தில் எல்லோருமே இறைவனின் திருப்பொருத்தத்தை வேண்டி நல்லமல்களிலும், தான தருமங்களிலும் ஈடுபடுவது வழமை. இந்த நடைமுறை மத்திய கிழக்கு நாடுகளில் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனை தவறாக பயன்படுத்தி பல ஆசிய நாட்டவர்கள் பொய்களை கூறி பிச்சை எடுக்கிறார்கள் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
 
ரமழான் மாதத்தில் பிச்சை எடுப்பவர்களை கைது செய்வதற்காக வேண்டி துபாய் பொலிஸ் சில நாட்களுக்கு முன்பு தனிப்படை ஒன்றை அமைத்திருந்தது.
அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் 65 பிச்சைக்காரர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டிருப்பதாக துபாய் குற்ற புலானய்வு துறையின் உதவி இயக்குனரான மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.
இவர்களில் 54 ஆண்கள், 8 பெண்கள், 3 சிறுவர்கள் அடங்குகின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருமே பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டு மிகவும் நூதனமான முறையில் பிச்சை எடுத்து வந்துள்ளமை தெரியவதுள்ளது.
எதிர்வரும் தினங்களில் இவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி இவர்களுக்கான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. ரமழான் மாதங்களில் பிச்சை எடுப்பவர்களை கைது செய்வதற்காக வேண்டி துபாய் பொலிஸ் 48 பொலிஸ் உளவுத்துறை குழுக்களை பள்ளிவாயல், கடைதெருக்கள், சந்தைகள், குடியிருப்பாளர் தொகுதிகள், பல்பொருள் அங்காடிகள், ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்துள்ளமை எச்சரிக்கை ஊட்டக்கூடிய செய்தி.
நூதனமான முறையில் பிச்சை எடுப்பவர்களை யாராவது காணுமிடத்து அவர்களை பற்றிய தகவல்களை 800243 என்கின்ற தொலைபேசி இலக்கத்தில் அழைத்து தெரியபப்டுத்தலாம்.
இந்த இலக்கம் ஐக்கிய அரபு எமிரேட்சில் வாழ்பவர்களுக்கு மட்டும்.

0 comments:

Post a Comment